Latestஉலகம்

விமானத்தில் ‘பீர்’ தர மறுத்ததால் பிளேடில் அறுத்துக் கொண்ட பயணி

வாஷிங்டன், மே.28- செயிண்ட்குரோயிஸ் நகருக்கு பறந்து கொண்டிருந்த உள்நாட்டு பயணிகள் விமானத்தில் பயணி ஒருவர் பீர் தர மறுத்ததால் ஆத்திரத்தில் பிளேடால் உடலை கிழிந்து கொண்ட சம்பவம் மற்ற பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

செயிண்ட் குரோயிஸ் சென்றுக் கொண்டிருந்த உள் நாட்டு பயணிகள் விமானத்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அதில் பயணம் செய்த ஜேசன் பெலிஸ் என்ற பயணி, பணிப் பெண்ணிடம் “பீர்” கேட்டுள்ளார். பணிப்பெண்ணும் முதலில் பீர் கொடுத்திருக்கிறார்.. சிறுது நேரம் கழித்து மீண்டும் பீர் கேட்டுக்கொண்டே இருந்தார் ஜேசன் பெலிஸ்.

போதை அதிகமானதால் பணிப்பெண் பீர் தர மறுத்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த ஜேசன் பெலிஸ் கழிவறைக்குச் சென்று வெளியே வராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து இருக்கையில் அமர வைத்துள்ளனர். ஆனால் அவர் தனது அருகில் அமர்ந்திருந்தவரின் மடியில் உட்கார்ந்து கொண்டு தகராறு செய்தார்.

அவரை விமான ஊழியர்களும் சக பயணிகளும் கட்டுப்படுத்த முயன்றுள்ளனர்.. ஒரு கட்டத்தில் அவர் பிளேடால் தனது உடலை கிழித்து கொண்டார் .இதனால்ஐரத்தம் கொட்டியது.

இதற்கிடையே விமானம் செயிண்ட் குரோயிஸ் நகரை வந்தடைந்தது. இது குறித்த தகவல் ஏற்கனவே போலிசாருக்கு தெரிவிக்கப் பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து விமான நிலையத்துக்குள் வந்த போலீசார் அவரை கைது செய்து இழுத்துச் சென்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker