Latestமலேசியா

இல்லத்தரசிகளுக்கு சேமநிதி: கூடுதல் வசூலிப்பு இல்லை! -வான் அஸீசா

உலு சிலாங்கூர்,மே.29 – குடும்பத்தரசிகளும் ஊழியர் சேமநிதிக்கு பங்களிக்கும் திட்டத்தில் கணவரின் சம்பளத்தில் இருந்து கூடுதல் தொகை வசூலிக்கப்பட மாட்டாது என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா கூறினார்.

“மாறாக, இல்லத்தரசிகளின் கணவர்களின் சேமநிதியிலிருந்து 11 விழுக்காடில் இருந்து 2 விழுக்காடு தொகை, மனைவிமார்களுக்கு ஒதுக்கப்படும். நாங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்ளவில்லை.
குடும்பத்தரசிகளுக்கும் அங்கீகாரம் அளியுங்கள்,” என கோலகுபு பாருவில் உள்ள மூதியோர் இல்லத்திற்கு வருகை அளித்த மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய மேம்பாட்டு அமைச்சருமான வான் அஸிஸா தெரிவித்தார்.

மேலும், இல்லத்தரசிகளும் ஊழியர் சேமநிதிக்கு பங்களிக்கும் முறை குறித்து சேமநிதி வாரியத்தின் தலைமை செயல்நிலை அதிகாரி டத்தோ ஷாரீல் ரிட்ஸா ரிட்சுவானை வியாழக்கிழமை சந்திக்க அமைச்சு ஏற்பாடு செய்யும் என அவர் கூறினார்.

அது மட்டுமல்லாமல் கணவரின் வருமானத்தில் இருந்து கிடைக்கும் பங்களிப்பைத் தவிர, இந்த திட்டத்தில் அரசாங்கத்தின் ரிம.50 பங்களிப்பும் அடங்கியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker