Latestமலேசியா

மாமன்னருடன் திருமணமா? நூருல் இஷா மறுத்தார்!

கோலாலம்பூர், மே. 29- பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவரும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் மகளுமான நூருல் இஷா, மாமன்னர் 5ஆம் முகம்மட்டை மணக்கப் போகிறார் என்று சமூக ஊடகங்களில் வெளியான செய்தி ஒரு போலி செய்தி என்று நூரூல் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூற்றை அவர் மறுத்துள்ளார். மேலும் இதைவிட பல முக்கிய காரியங்கள் தமக்காக காத்திருப்பதாகவும் அவர் சொன்னார். ‘இதுவொரு போலியான செய்தி. இதனைத் துளிர்க்கும் முன்பே கிள்ளி எறிந்து விடுங்கள்’ என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியப் பொருளாதாரத்தைக் காக்க வேண்டும் என்ற நம்முடைய பிரதானப் பணியில் நாமெல்லாம் முதலில் கவனம் செலுத்துவோம் என்றார் அவர்.

குபாங் கிரியானியிலுள்ள இஸ்தானா மகோத்தா அரண்மனையில் சுல்தான் முகம்மட் அவர்களின் தாயாரான துங்கு அனிஸ் துங்கு அப்துல் ஹமிட், கடந்த 24ஆம் தேதியன்று நூருலின் பெற்றோர்களான அன்வார் மற்றும் வான் அஸிசா தம்பதியினருக்கு தனிப்பட்ட பேட்டியை அளித்துள்ளார்.

துணைப் பிரதமராக பதவியேற்ற பின்னர் டத்தோஶ்ரீ வான் அஸிசா, கிளாந்தானுக்கு அதிகாரப்பூர்வமாக வருகை மேற்கொண்ட போதே சுல்தான் முகம்மட்டின் தாயாரைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தனிப்பட்ட சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை நீடித்தது. ஆனால், சமூக ஊடகங்களில் செய்தி வேறு மாதிரியாக பரவியுள்ளது. திருமணம் குறித்த விவகாரங்கள் பற்றிப் பேசவே அன்வார் தம்பதிகள் அங்கு சென்றதாக தகவல்கள் பரவியுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker