Latestமலேசியா

மோடி மலேசியா வருகை: மகாதீருடன் சந்திப்பு!

கோலாலம்பூர்,மே.29 – எதிர்வரும் மே 31ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை சந்திக்க கோலாலம்பூருக்கு வருகை புரிவார்.

ஆசிய நாடுகளுக்கு வருகை புரியும் மோடி, மே 29 முதல் 31 வரை இந்தோனேசியாவுக்கும் மே 31 முதல் ஜூன் 2 வரை சிங்கப்பூருக்கும் வருகை புரிவார் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

மோடிக்கும் மகாதீருக்கும் இது முதல் சந்திப்பு ஆகும். மேலும், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸீசா மற்றும் அவரது கணவர் அன்வார் இப்ராகிமையும் மோடி சந்திப்பார் என எதிபார்க்கப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவிற்கு கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வருகை புரிந்தார்.

இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் தலைவர்களின் அழைப்பின் பேரில் வருகை புரியவிருக்கும் மோடி,  இருதரப்பு தலைமைச் சந்திப்புக்கு அப்பால், வணிகத் துறை மற்றும் இந்திய சமூகங்களுடனான சந்திப்புகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker