Latestமலேசியா

“மோதல் வேண்டாம்!” – உதயகுமாருக்கு வேதமூர்த்தி கோரிக்கை

கோலாலம்பூர், மே 29 – பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டாம் என்று ‘ஹிண்ட்ராப் 2.0’ அமைப்பின் தலைவரான தம்முடைய மூத்த சகோதர பி. உதயகுமாரை ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் பி. வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

ஒரு விஷயத்தை உதயகுமாருக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன். பாரிசான் தோல்விகண்டு விட்ட பின்னர் நமது போரும் முடிந்து விட்டது. எனவே ‘ மோதல்’ போக்கை அவர் கைவிட்டு, புதிய மலேசியாவை உருவாக்கும் முயற்சிகளுக்காக கடுமையான உழைக்கும் அனைவருடனும் கைகோர்க்க வேண்டும் என்று வேதமூர்த்தி சொன்னார்.

இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண, பிரதமர் மகாதீரடமிருந்து வாக்குறுதிகளை தம்முடைய தரப்பு பெற்றுள்ளது. எனவே மோதல் பாதையை தேர்வு செய்வது அர்த்தமற்றது என்றார் அவர்.

நீண்ட காலம் அரசியல், சமூக அரங்கிலிருந்து ஒதுங்கியிருந்த பி.உதயகுமார் தற்போது தமது ஹிண்ட்ராப் 2.0 அமைப்பின் வழி செயல்படத் தொடங்கியுள்ளார்.

நேற்று தம்முடைய ஆதரவாளர்களுடன் சென்று புத்ராஜெயாவில் மறுசீரமைப்புக்குழுவிடம் 20 கோரிக்கைகள் கொண்ட பட்டியலை சமர்ப்பித்தார்.

மேலும் ஹிண்ட்ராப் 2.0 என்று எந்தவொரு அமைப்பும் கிடையாது. உதயகுமார், மனித உரிமைக் கட்சியின் தலைவர் என்றுதான் இதுவரை கூறி வந்துள்ளார் என்று வேதமூர்த்தி சுட்டிக் காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker