Latestமலேசியா

‘ஹிண்ட்ராப் 2.0’ கோரிக்கை: பரிசீலிப்போம்! -மகாதீர்

கோலாலம்பூர்,மே.29 – ஹிண்ட்ராப் 2.0 முன்வைத்திருக்கும் 25 கோரிக்கைகள் தொடர்பில் குறிப்பாக, நில விவகாரங்கள் மற்றும் மாரா தொழில்நுட்பக் கல்லூரியில் முஸ்லிம் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பது உள்ளிட்ட அம்சங்களை அரசாங்கம் ஆராயும் என்று பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

அவர்களின் கோரிக்கைகளை ஆராய்வோம், பரிசீலிப்போம் என்றார் அவர். பெல்டா நிலத் திட்டம் போன்று குறைந்த வருமானம் கொண்ட இந்தியக் குடும்பங்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்று ஹிண்ட்ராப் 2.0 கோரிக்கை விடுத்திருந்தது.

மாரா தொழில்நுட்பக் கல்லூரியை எல்லா இனத்தினருக்கும் திறந்து விட வேண்டும் என்று அது கோரிக்கை விடுத்திருந்தது.

மேலும், பெல்டாவைப் போன்று 20 ஆயிரம் துண்டு நிலங்கள், செம்பனை மற்றும் கால் நடை வளர்ப்புக்கான வசதிகளுடன் நில உரிமைத் திட்டமாக அடிப்படை வசதிகளுடன் தரப்பட வேண்டும் என்று ஹிண்ட்ராப் 2.0 பி.உதயமூர்த்தி கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பான 25 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மினாரா இல்ஹாமிலுள்ள அரசாங்க ஆலோசனை மன்றத்திடம் உதயகுமார் சமர்ப்பித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker