Latestமலேசியா

என்ன ஆனார் ஜமால்? இன்னும் தலைக் காட்டவில்லை!

அம்பாங்,மே.30 – இன்று அம்பாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் விளக்கம் அளிக்கப் போவதாகக் கூறிய சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யுனோஸ் இன்னமும் காணவில்லை.

நேற்று செய்தியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட குரல் பதிவில், இன்று அம்பாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கப் போவதாகவும் அதை அடுத்து செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்க போவதாகவும் ஜமால் கூறி இருந்தார்.

ஆனால், அவரின் வருகைக்காக அம்பாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் மதியம் 2 மணி முதல் மழையில் காத்திருந்த 50க்கும் மேற்பட்ட நிருபர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“ஜமால் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை; அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு, அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை .ஜாமீன் நடைமுறைகளை செயல்படுத்த அவரின் வருகைக்காக காத்திருக்கிறோம்,” என அம்பாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஜமாலின் வழக்கறிஞர் டத்தோ முகமட் இம்ரான் தம்ரின் தெரிவித்தார்.

அம்பாங் புத்ரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது போலீசாரின் கண்காணிப்பில் இருந்த ஜமால் சில தினங்களுக்கு முன்னர் தலைமறைவாகி விட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker