Latestமலேசியா

எம்எச்17 விமானம் பற்றிய எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை!

கீவ் (உக்ரைன்) மே 30 – மலேசியாவுக்குச் சொந்தமான எம்எச்17 பயணிகள் விமானத்தை கிழக்கு உக்ரைனில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியது ரஷ்ய இராணுவம் தான் என்று செய்தி வெளியிட்ட பிரபல ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரஷ்யாவில் உயிருக்கு மிரட்டல் ஏற்பட்டதன் காரணமாக உக்ரைனுக்கு ஓடி வந்து அடைக்கலம் பெற்ற 41 வயதுடைய அர்காடி பாப்சென்கோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய அதிபர் புடினை மிகக் கடுமையாக விமர்சித்த வந்தவர் அர்காடி. மேலும் சிரியாவுக்கு, ஆயுதங்கள் மற்றும் தனியார் இராணுவ குத்தகை ஒப்பந்தரார்களை ரஷ்யா அனுப்பி வருவதாகவும் இவர் விமர்சித்து வந்தார்.

இராணுவம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் புகழ்பெற்றவராக விளங்கிய அர்காடி, முன்னாள் செச்ஸென் போரில் பங்கேற்ற ஒரு இராணவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் அதிபர் புடின் ஆதரவாளர்கள் இவரது உயிருக்கு மிரட்டல் விடுத்ததை அடுத்து உக்ரைனில் இவர் அடைக்கலம் பெற்றிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker