Latestமலேசியா

சாலை நீரில் தட்டுக் கழுவும் உணவக ஊழியர்கள்! அதிர்ச்சியில் மக்கள்! -(VIDEO)

கோலாலம்பூர்,மே.30 – பங்சாரில் அமைந்துள்ள ராஜ் வாழை இலை உணவகத்தின் ஊழியர்கள் சாலைக் குழியில் தேங்கியிருந்த தண்ணீரைக் கொண்டு தட்டுகளைக் கழுவுவது போன்ற புகைப்படங்களும் காணொளியும் சமூக ஊடகங்களில் காட்டுத் தீ போல பரவி பெரும்பரப்பை ஏற்படுத்தின.

Raj’s Banana leaf Bangsar outlet. Boycott!!

Posted by Discover Subang Jaya on Tuesday, 29 May 2018

அந்தக் காணொளியில், மூன்று ஊழியர்கள் தட்டுகளை சுத்தம் செய்வதற்காக சாலையில் தேங்கிய தண்ணீரை பயன்படுத்துவதையும் அதனை மற்றொரு ஊழியர் வேடிக்கை பார்ப்பதையும் காண முடிகிறது.

மிகவும் பிரபலமான அந்த உணவகத்தில் இது போன்று நடந்தது அதன் வாடிக்கையாளர்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்தக் காணொளியைக் கண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது வெறுப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர்.

இது எப்போது நடந்தது, எவ்வளவு காலம் நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இந்த உணவகம் இவ்வட்டாரத்தில் மிகவும் பிரலமான உணவகம் என்பதால் இதன் வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பலரும் கடுமையான விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker