Latestமலேசியா

மூடப்பட்ட உணவகத்தின் பங்காளியா? லீ சோங் வெய்க்கு மறுப்பு

கோலாலம்பூர், மே.30- சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் தட்டுக்களை கழுவும் உணவக ஊழியர்களின் செய்கையால் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி, கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகத்தினால் இழுத்து மூடப்பட்ட ‘ராஜ் வாழை இலை’ உணவகத்திற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று பிரபல பேட்மிண்டன் வீரர் டத்தோ லீ சோங் வெய் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அந்த உணவகத்தின் இணை உரிமையாளர் லீ சோங் வெய் என சமூக ஊடகங்களில் பரபரப்பாக செய்தி பரவியது.

அந்த உணவகத்தின் உரிமையாளராக இண்டர்காம்பஸ் சென்.பெர்ஹாட் என்ற நிறுவனம் அடையாளம் காணப்பட்டது. நிறுவனப் பதிவு ஆணையத்தின் தகவல்படி அதில் லீயும் ஒரு பங்குதாரர் என தகவல் வெளியானது. இது குறித்து கருத்துரைத்த டத்தோ லீ சோங் வெய், ‘அது நானல்ல’ என்று பதிலளித்துள்ளார்.

சாலையில் தேங்கிய நீரில் உணவகத் தட்டுக்களை ஊழியர்கள் கழுவும் காட்சியைக் கொண்ட 30 நிமிடக் காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மிகப் பிரபலமான அந்த உணவகத்தின் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker