Latestஉலகம்

விமானத்தில் வெடிகுண்டு புரளி; அமளியில் பயணிகள் படுகாயம்!

ஜக்கர்த்தா, மே.30- போர்னியோ தீவிலிருந்து லையன் ஏர் விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த தருணத்தில் உள்ளே இருந்த பயணி ஒருவர் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து பயணிகள் மத்தியில் பெரும் அமளி ஏற்பட்டு பலர் படுகாயமடைந்தனர்.

பயணிகள் பதற்றமடைந்ததால் ஒருவருக்கொருவர் இடித்துத் தள்ளிக்கொண்டு வெளியேற முயன்றால் ஏற்பட்டஅமளியில் குறைந்தது 10 பயணிகள் காயமடைந்தனர். தலையில் பலருக்கு காயம் ஏறபட்டது சிலருக்கு எலும்பு முறிவு ஏறப்பட்டது என்று இந்தோனிசியப் போலீசார் தெரிவித்தனர்.

லையன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் போர்னியோ தீவிலிருந்து ஜக்கர்த்தா புறப்பட 189 பயணிகளுடன் தயாராக இருந்த வேளையில், 26 வயதுடைய பிரான்டினஸ் நிரிக்கி என்ற பயணி, விமான ஊழியரிடம் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிய போது பக்கத்தில் இருந்த மற்ற பயணிகளின் காதுகளில் விழுந்ததால இந்த விபரீதம் நிகழ்ந்தது.

இதைக் கேட்ட மற்றொரு பயணி தப்பித்து ஓடும் நோக்கில் ஆபத்து அவசர வழிக்கான கதவை உடைத்து வெளியேறினார். இதனால் மற்ற பணிகளும் இந்த வழியாக வெளியேறினர். இவர்களில் சிலர் விமானத்தின் வலது பக்க இறக்கையின் மீது நின்று கொண்டிருப்பதை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள படங்கள் காட்டுகின்றன.

மேலும் விமான இறக்கையில் இருந்து இறங்க முயன்ற வழுக்கி விழுந்து சிலர் தலையில் காயமடைந்ததோடு மேலும் சிலர் எலும்பு முறிவுகளுக்கும் இலக்காயினர்.

பின்னர் விமானம் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் நிரிக்கி என்ற அந்தப் பயணியும் அவசர வழிக் கதவை உடைத்த பயணியும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker