Latestஉலகம்

அமெரிக்க பாடகருடன் பிரியங்கா உல்லாசம்! வைரலாகும் படங்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ், மே 31- பிரபல அமெரிக்கா பாப் பாடகர் நிக்ஜோனாஸ், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா இடையே காதல் மலர்ந்து இருப்பதாக கூறப்படும் நிலையில் இருவரும் ஒன்றாக உல்லாசமாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.

இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். போலிவுட் படங்களிலும் நடத்து வரும் பிரியங்கா அமெரிக்காவில் பிரபலமான “குவான்டிகோ” என்ற தொலைக்காட்சி தொடர் மூலமும் பிரபலமாகி இருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தன்னுடன் நடித்த சில இந்தி நடிகர்களுடன் பிரியங்கா சோப்ராவை இணைத்து ஏற்கனவே கிசு கிசுக்கள் வந்தன.

தற்போது அமெரிக்காவின் பிரபல இளம் பாப் பாடகரான நிக்ஜோனாசுடன் பிரியங்கா சோப்ராவுக்கு நெருக்கம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடிக்கடி இருவரும் ஜோடியாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

படகு சவாரி, நண்பர்களுடன் விருந்து என புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் பிரியங்கா- நிக்ஜோனாஸ் நியூயார்க்கில் நடந்த கால்பந்து போட்டியை காண ஜோடியாக வந்துள்ளனர்.

இருவரும் ஸ்டேடியத்துக்கு ஜோடியாக வந்த வீடியோ படம் இணைய தளத்தில் பரவி இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இது இந்திப்படவுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இருவரும் காதலிக்கவில்லை என்றும் அவை வெறும் வதந்தி தான் என்றும் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker