Latestமலேசியா

இணையச் சேவையின் விலையை குறைக்கத் திட்டம்!! – கோபிந்த் சிங்

கோலாலம்பூர்,மே .31- தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சுக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே இணையதள விலை குறைப்புத் தொடர்பான சந்திப்பு இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெறும் என அதன் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ கூறினார்.

இணையதள வேகத்தை அதிகரிக்கும் அதே வேளையில் அதன் விலையை குறைக்கவும் தனது அமைச்சு ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

“இதில் பல்வேறு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். முதலாவது அம்சம், இணையதள வேகத்தை அதிகரிக்கச் செய்தல். அதனை விரைவில் செயல்படுத்த முடியுமா என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். என்றார் அவர்.

மற்றொரு அம்சம் இணையதள விலையை குறைத்தல். இதனைச் செயல்படுத்துவதால் விளைவை சந்திக்க நேரலாம். ஆனால், நாங்கள் ஒரு குறிப்பிட்ட திட்டத்தை வைத்துள்ளோம். அதோடு விலைகள் எவ்வாறு குறைக்கப்படலாம் என்பதை பேச்சுவார்த்தை நடத்துவோம்,” என கோபிந்த் சிங் தியோ சொன்னார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக மற்ற அமைச்சகங்களின் துறைகளை முன்னமே சந்தித்து விட்டதாகவும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கோபிந்த் சிங் தியோ கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker