Latestமலேசியா

தாபோங் ஹராப்பான்: ஒரே நாளில் ரிம.7 மில்லியன் வசூல்

பெட்டாலிங் ஜெயா,மே.31 – தேசியக் கடனுக்குப் பங்களிக்க அறிமுகப்படுத்தப்பட்ட தாபோங் ஹராப்பான் 24 மணி நேரத்தில் 7 மில்லியன் ரிங்கிட்டை வசூல் செய்துள்ளது என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

மக்கள் நன்கொடை செலுத்துவதன் மூலம் அவர்களின் தேசபற்றை வெளிப்படுத்த விரும்பினால் நாங்கள் அதை வரவேற்கிறோம் என்றார் அவர். கிடைத்த நிதி நாட்டின் பொருளாதாரத்தின் நம்பிக்கையை பாதிக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டபோது லிம் குவான் எங் அவ்வாறு தெரிவித்தார்.

“பொதுமக்கள் எவ்வளவு நன்கொடை கொடுக்க விரும்புகிறார்களோ அதை அவர்கள் தாரளமாக கொடுக்கலாம்; அது பெரிய தொகையாகவோ அல்லது சிறிய தொகையாகவோ இருக்கலாம். அது அவரவர் விருப்பம்,” என நிதி அமைச்சர் கூறினார்.

மலேசியர்கள் அவர்கள் நாட்டின் மீதான தேசபக்தியை வெளிகாட்ட இதுவும் ஓர் வாய்ப்பு. நம் நாட்டில் இன்று ஒரு குழந்தை பிறந்து இருந்தால், அந்தக் குழந்தை 33,000 ரிங்கிட் கடனைக் கொண்டிருக்கும் என்று அவர் சொன்னார்.

மேலும், 1990களில் தென் கொரியா நிதி நெருக்கடியைச் சந்தித்தபோது, கொரியர்கள் நன்கொடையாக அளித்த தங்கக் பொருட்களை உருக்கி அந்த நாடு சொந்த கடன்களைத் தீர்த்துக் கொண்டதை லிம் குவான் எங் சுட்டிக் காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker