Latestமலேசியா

துன் மகாதீரை சந்தித்து வாழ்த்துக் கூறினார் மோடி!

புத்ராஜெயா, மே. 31– இன்று காலை 11.35 மணியளவில் பிரடானா புத்ராவில் பிரதமர் துன் டாக்டர் மகாதீரைச் சந்தித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அண்மையில் பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமராக துன் மகாதீர் நியமிக்கப்பட்டதை முன்னிட்டு அவர் வாழ்த்துகளைக் கூறினார்.

இந்தோனிசியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நரேந்திர மோடி, அடுத்து சிங்கப்பூருக்குச் செல்லும் வழியில் மலேசியாவுக்கு வருகை புரிந்தார். துன் மகாதீருக்கும் நரேந்திர மோடிக்கும் இடையே இது முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் உறவுகளை அடிப்படையை பலப்படுத்துவதாக இந்தச் சந்திப்பு அமைந்திருப்பதாக விஸ்மா புத்ரா அறிக்கை கூறியது.

வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் மலேசியாவும் இந்தியாவும் நல்லுறவுகளை அனுபவித்து வருகின்றன. குறிப்பாக அடிப்படை மேம்பாட்டுத் திட்டங்கள், கல்வி, சுற்றுலா மற்றும் தற்காப்புத்துறை ஆகியவற்றில் இரு நாடுகளும் உறவை வலுப்படுத்தி வருகின்றன.

தென் ஆசியாவில் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்களியாக இந்தியா விளங்கி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 6,143 கோடி ரிங்கிட் அளவில் வர்த்தகப் பங்கு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker