Latestமலேசியா

PTPTN கடன்: 4,33,000 பேரின் பயணத் தடை நீக்கப்படும்!

புத்ராஜெயா,மே.31 – பி.டி.பி.டி.என். எனப்படும் தேசிய உயர்கல்வி கடனுதவியை பெற்ற 4 லட்சத்து 33,000 பேரின் பயணத்தடை கூடிய விரைவில் நீக்கப்படும் என கல்வி அமைச்சர் டாக்டர் மாஸ்லி மாலிக் தெரிவித்தார்.

மே 24 தொடங்கிய பயணத் தடையை அகற்றும் பணி கட்டம் கட்டமாக ஜூன் 15 வரை நடைபெறும் என்றார் அவர். கடனைச் செலுத்தத் தவறிய சுமார் ஒரு மில்லியன் பேரை பி.டி.பி.டி.என். கருப்பு பட்டியல் இட்டது.

“அவர்களில் சுமார் 6 லட்சத்து 55,000 பேர் தங்களது கடனைத் திருப்பி செலுத்தி இருக்கின்றனர். அதன் மொத்தத் தொகை 1.9 பில்லியன் ரிங்கிட் ஆகும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

குடிநுழைவுத் துறையின் கருப்புப் பட்டியலில் இருந்து அனைவரின் பெயரும் நீக்கப்படும் என நாங்கள் முன்னமே உறுதி அளித்து இருக்கின்றோம். அதற்கேற்ப இதனை ஜூன் மாதத்தின் மத்தியில் முன்பே பயணத் தடைகள் அனைத்தும் நீக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்,” என மாஸ்லி மாலிக் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker