Latestமலேசியா

புத்த பிக்கு வேடத்தில் மலேசிய கொலைகாரன்! காட்டிக் கொடுத்தது ‘பச்சை’

பேங்காக், மே.31- கடந்தாண்டு, ஜொகூர் பாருவிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில், ‘ஆ சூன்’ என்ற ஆடவர் கொடூரமாக குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கியப் புள்ளியாக தேடப்படும் ஒருவர், போலீசாரிடமிருந்து தப்பும் நோக்கில் இதுவரை தாய்லாந்து நாட்டில் புத்தப் பிக்குப் போல் வேடமிட்டு வாழ்ந்து வந்துள்ளான்.

36 வயதான அந்த ஆடவர், தாய்லாந்து நாட்டில் புத்தப் பிக்குவாக வலம் கொண்டிருந்த வேளையில், அவனது கைகளில் குத்தப்பட்டிருந்த ‘பச்சை’ அவனை அந்நாட்டு போலீசாரிடம் காட்டிக் கொடுத்தது.

புத்தப் பிக்கு ஒருவரின் கைகளில், இயேசுவின் வடிவம் பச்சைக் குத்தப் பட்டிருந்ததைக் கண்ட தாய்லாந்து போலீசார், அவன் மீது சந்தேகம் கொண்டனர்.

“தனது பழைய வாழ்க்கையை மறந்து புதிய பாதையில் நடக்க அவர் முடிவெடுத்து இருக்கலாம். அல்லது, சமய வழியில் சென்று விட்டால், மலேசிய மற்றும் தாய்லாந்து போலீசாரின் கைகளில் சிக்காமல் தப்பி விடலாம் என்று அவர் நினைத்திருக்கலாம்.

“அந்த ஆடவரை கைது செய்த போது, நாங்கள் நிஜமாகவே அந்தக் கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆடவரைத் தான் கைது செய்கிறோமா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்தது. எங்களிடம் கொடுக்கப்பட்ட புகைப்படத்தைக் காட்டிலும், எங்களால் கைது செய்யப்பட்ட அந்தப் ‘புத்த பிக்கு’ உடல் மெலிந்திருந்தார்.

“இருந்த போதிலும், அவரின் கைகளில் இருந்த பச்சை காட்டிக் கொடுத்தது” என்று அந்த ஆடவரை கைது செய்ய உதவிய தாய்லாந்து துப்பறிவாளர் ஒருவர் கூறினார்.

நேற்று காலை 7 மணியளவில், சய்யாபூம் வட்டாரத்தில் உள்ள புத்தக் கோவில் ஒன்றில் அந்த ஆடவர் மற்றும் அவரின் மனைவியை தாய்லாந்து போலீசார் கைது செய்தனர். கடந்த 6 மாதங்களாக மலேசிய மற்றும் தாய்லாந்து இவனைத் போலீசார் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker