Latestஉலகம்

சிங்கையின் வர்த்தகப் பகுதி, கொஞ்ச நேரம் இருளில்…!

சிங்கப்பூர்,ஜூன்.1- சிங்கப்பூரில் இன்று பிற்பகலில் முக்கிய பகுதியான மத்திய வர்த்தக மாவட்டம் சார்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பிற்பகல் 2.40 மணியளவில் நடந்த இந்த மின்சாரத் துண்டிப்பில் இவ்வட்டாரத்தில் உள்ள பல வர்த்தக மையங்கள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் மங்கிய இருளில் மூழ்கின.

பகல் நேரமாக இருந்ததால் இவ்வட்டாரம் முழு இருளில் மூழ்காமல் தப்பித்தது. கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் அதிகமான அலுவலகங்கள், மற்றும் வர்த்தக மையங்கள் பாதிப்படைந்தன.

எனினும், துரிதமாகச் செயல்பட்ட மின்சாரத்துறை உள்ளிட்ட பல துறைகள் அடுத்த 34 நிமிடங்களுக்குள் மீண்டும் இவ்வட்டாரம் முழுவதையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.

இந்த மின்சாரத் துண்டிப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பல அலுவலகங்கள் மின்சார வெளிச்சமின்றி இருளடைந்த நிலையில் ‘லிப்டுகள்’ செயலிழந்தன. சில இடங்களில் சாலை சமிக்ஞை விளக்குகள் கூட செயல்படவில்லை என்று சமூக ஊடகங்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.

பேரங்காடிகளின் உள்புறம் இருளில் மூழ்கின. இதனால், ஊழியர்கள் அனைவரும் பேரங்காடிகளின் முற்றங்களில் திரண்டு இருந்தனர். பலருக்கு இது வித்தியாசமான ஓர் அனுபவமாக அமைந்ததாக சமூக ஊடகங்களில் கருத்துரைத்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker