Latestமலேசியா

பெருநாள்; கேடிஎம் சிறப்பு சேவை: 19,800 கூடுதல் டிக்கெட்டுகள்!

கோலாலம்பூர், ஜூன்.1 – எதிர்வரும் நோன்பு பெருநாளை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப ஆறு கூடுதல் இ.டி.எஸ்.விரைவு ரயில் சேவையை மேற்கொள்ளும் என்பதோடு 19,800 கூடுதல் டிக்கெட்டுகளையும் விற்பனை செய்யும் என்று கேடிஎம் அறிவித்தது.

அதற்கான சேவைகள் மற்றும் டிக்கெட்டுகள் ஜூன் 12 முதல் 14 வரை, மற்றும் ஜூன் 17 முதல் 24 வரைக்குமானவை ஆகும். அந்தக் கூடுதல் டிக்கெட்டுகளுக்கான விற்பனை திங்கள்கிழமை முதல் தொடங்கும்.

ஹரிராயாவிற்கு முன்பும் பின்பும் தேதியிடப்பட்டிருந்த பெரும்பாலான டிக்கெட்டுகள் கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே விற்கப்பட்டு விட்டன என்று கேடிஎம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

மேலும், கேடிஎம் பயணிகள் நோன்பு துறக்க, அவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 500 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் எனவும் அது தெரிவித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker