Latestமலேசியா

ரோஸ்மா இல்லை; கார்ட்டூனும் இல்லை! –கார்ட்டூனிஸ்ட் ஜூனார் வேதனை

கோலாலம்பூர், ஜூன்.1- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பதவி இழந்ததைத் தொடர்ந்து, அவரின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர், வெளியுலகத்திற்கு காணாமல் போய்விட்டார். முன்பைப் போன்றில்லாமல், நினைத்த நேரம் எல்லாம் தம்மால் அவரை கார்ட்டூனாக வரைய முடியவில்லையே என்று அரசியல் கார்ட்டூன்களை வரையும் கார்ட்டூனீஸ் ‘ஜூனார்’ வருத்தம் தெரிவித்தார்.

நஜிப்பைக் காட்டிலும், ரோஸ்மா மிகவும் சுவாரஸ்யமானவர், கம்பீரமானவர். அவரை எளிதாக கார்ட்டூனாக வரைந்து விடலாம். ரோஸ்மாவின் முகத்தில் பல உணர்ச்சிகள் இருக்கும். அவரின் செய்கையிலும் பல கோணங்கள் இருக்கும். அவரை கார்ட்டூனாக சித்தரிப்பது மிகவும் எளிது. இப்போது அவர் ‘காணாமல்’ போனது தமக்கு இழப்பு என்று ஜூனார் என்றழைக்கப்படும் ஜூல்கிப்ளி அன்வார் கூறினார்.

“அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சர்வதிகாரி ஹிட்லர், மலேசிய பிரதமர் துன் மகாதீர் போன்றவர்கள் எவ்வளவு கம்பீரமாக இருப்பார்களோ, அந்த அளவிற்கு ரோஸ்மாவும் கம்பீரமாக இருப்பார். நஜிப்பிடம் அந்த கம்பீரம் இல்லை. நஜிப்பை காட்டிலும், ரோஸ்மாவை கார்ட்டூனாக வரையவே நான் அதிகம் விருப்பப்படுவேன்” என்று அவர் சொன்னார்.

“தனது மனதில் என்ன தோன்றுகிறதோ அதனை ரோஸ்மா வெளிப்படையாக கூறுவார். அவரின் நகைகள், தோற்றம், கைப்பை மற்றும் வைர மோதிரம் ஆகியவற்றை வரைய எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று ஜூனார் சொன்னார்.

“நஜிப் அதிகமாக பேச மாட்டார். ஜெ.லோ, 1எம்டிபி பற்றியெல்லாம் அவர் பேசியதில்லை. சாப்பாடு, சாக்லெட், கீரை குறித்து தான் அவர் பேசி இருக்கிறார். அவற்றை வரைவதில் சுவாரஸ்யம் இல்லை” என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker