Latestமலேசியா

2018- பட்ஜெட் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு முயற்சி -லிம் குவான்

கோலாலம்பூர், ஜூன்,1- 2018ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி சார்ந்த 2.8 விழுக்காடு பட்ஜெட் பற்றாக்குறையை மலேசியா சமாளிக்க நடவடிக்கை எடுக்கும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரி இன்று முதல் ரத்து செய்யப் பட்டிருப்பதால் 21 பில்லியன் ரிங்கிட் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் பட்ஜெட் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

இந்த 21 பில்லியன் வருமான இழப்பு, இதர வருமான வாய்ப்புக்களின் வழி ஈடுகட்டப்படும். உலகளாவிய எண்ணெய் விலையில் ஏற்றத்தின் வழி 14.4 பில்லியன் ரிங்கிட் வருமானம் ஈட்டப்படும்.

மேலும் அரசாங்க தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து கூடுதலான இலாப ஈவைப் பெறுவதன் வழி 5 பில்லியனும் எஸ்.எஸ்.டி. எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி மூலம் 4 பில்லியன் ரிங்கிட்டும் வருமானம் பெறுவதன் வழி, ஜிஎஸ்டி அகற்றப்பட்டததால் ஏற்பட்ட 21 பில்லியன் இழப்பு சரிக்கட்டப்படும் என்று லிம் சொன்னார்.

இதர சில திட்டங்களை சீரமைப்பதன் வழி செலவினத்தைக் கட்டுப்படுத்தி, குறைந்தபட்சம் 10 பில்லியன் ரிங்கிட் வரை மிச்சப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கும் என்றார் அவர்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker