Latestமலேசியா

கள்ளக் குடியேறிகளுக்கு எதிரான அதிரடிர வேட்டையில் மொகிடின்!

கோலாலம்பூர், ஜூன்.2 – நேற்று பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற சோதனையில் 170 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை 4 மணி அளவில் தொடங்கிய அந்த சோதனையை குடிநுழைவுத் துறை நடத்தியது.

பதிவு அட்டை எனப்படும் பெர்மிட் இல்லாததாலும் அவர்களின் காலக்கெடு முடிந்ததற்காகவும் 170 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யபட்டனர் என சோதனையில் கலந்துக் கொண்ட உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

“நாட்டின் அமைதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது,” என அவர் தெரிவித்தார்.

இது மொகிடின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றப் பின் கலந்துக் கொள்ளும் முதல் சோதனை ஆகும். அவரோடு குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலியும் உடன் இருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker