Latestஉலகம்

மேகன் மார்க்கலிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தாரா தந்தை?

லண்டன், ஜூன்.2- மேகன் மார்க்கலிடம் அவரது தந்தை தாமஸ் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறார் என்ற செய்தி வெளியான நிலையில், அதை அவரது தந்தை தாமஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பிரிட்டன் இளவரசர் ஹார்ரி- மேகன் மார்க்கல் திருமணம் சமீபத்தில் நடந்தேறியது. இந்த திருமணத்தில் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய சூழல் இருந்ததால் மார்க்கலின் தந்தை தாமஸ் அரசு திருமணத்தில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் மார்க்கலிடம் பணம் கேட்டு வற்புறுத்தியதாகவும்- பணம் தர மார்க்கல் மறுத்து விட்டதாகவும் .செய்திகள் உலா வந்தன.
இது ஒரு வதந்தி என தாமஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், ”மார்க்கலிடம் நான் பணம் கேட்டதாக வரும் வதந்தி உண்மையில்லை. எனக்கு ஓய்வூதிய பணம் வருகிறது. அதுவே என் செலவுகளுக்கு போதுமானது.”

”நான் மார்க்கலிடம், பணம் குறித்தே பேசவே மாட்டேன். அப்படி நான் ஒரு வேளை பணம் கேட்டிருந்தால், அவர் தர மறுக்க மாட்டார்” என நினைக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker