Latestமலேசியா

MyEG ஒப்பந்தம் ரத்து

கோலாலம்பூர், ஜூன்.2 – பல அரசாங்கத் துறைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட இணைய சேவைத் தளமாக செயல்பட்டு வந்த மைஇஜி (MyEG) நிறுவனத்தின் ஒப்பந்தம் இம்மாதம் இறுதியில் ரத்து செய்யப்படவுள்ளது.

குடிநுழைவுத் துறை சம்பந்தப்பட்ட பல்வேறு கட்டணங்கள், அந்நியத் தொழிலாளர்களை நாட்டுக்குள் தருவிக்கும் சேவைகள் யாவும் மைஇஜி நிறுவனத்தின் மூலமாகவே இணையம் வழி செயல்படுத்தப் படுகின்றன.

மேலும் போக்குவரத்து துறை தொடர்பான பல சேவைகளும், கட்டணங்களும், அபராதங்களும்கூட மைஇஜி நிறுவனத்தின் மூலமாகவே செலுத்தப் படுகின்றன. இது குறித்து பல சர்ச்சைகளும் கண்டனங்களும் எழுந்தபோதும் முன்னாள் அரசாங்கம் அந்நிறுவனத்தின் சேவையைத் தொடர்ந்து வந்தது.

மைஇஜியைத் தவிர, குடிநுழைவுத் துறைக்கு இணையம் வழி சேவைகளை வழங்கி வந்த ‘இமான் ரிசோர்சஸ்’, ‘புக்தி மெகா’ ஆகிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படவுள்ளன. ஜூன் 30-ஆம் தேதியோடு இந்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் தெரிவித்தார்.

இந்த மூன்று நிறுவனங்களுக்கும், சில அம்னோ தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker