Latestமலேசியா

ஜிஎஸ்டி தொடர்பான புகாரா? தயங்காமல் செய்க !-இட்ரிஸ்

பெட்டாலிங் ஜெயா,ஜுன்.3 – அரசாங்கம் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரி அகற்றப்பட்ட நிலையில் பயனீட்டாளர்கள் வாங்கும் பொருள்களில் எந்தவொரு தவறான அல்லது பொருந்தாத விலையோ கண்டால் , சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்க வேண்டும் என பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.

ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரி நீக்கப்பட்டு எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியின் மீண்டும் நிலைநிறுத்தப்படவுள்ள இடைக் காலத்தில் நிலவும் சிரமங்களை பலர் இன்னமும் சமாளிக்க பழகி வருகின்றனர் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகமட் இட்ரிஸ் கூறினார்.

“பல விற்பனையாளர்கள் இன்னும் இது பற்றிய மாற்றங்களை அறிந்திருக்கவில்லை. எனவே, பொருள்களில் எந்தவொரு தவறான அல்லது பொருந்தாத விலையோ இருப்பது கண்டால் விற்பனையாளர்களை கேள்வி கேட்க பயனீட்டாளர்களுக்கு உரிமை உண்டு,’ என்றார் அவர்.

பங்சார் ஷாப்பிங் சென்டரில் அமைந்துள்ள ‘லா போடெகா’ உணகத்தில் ஒரு காலைச் சிற்றுண்டியின் விலை மே 26 மற்றும் ஜுன் 1க்கும் இடைபட்ட காலத்தில் 6.60 ரிங்கிட் விலை அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து அந்த உணவுக்கு ஜி.எஸ்.டி. அகற்றப்படுவதற்கு முன்பும் பின்பும் கிடைத்த ரசீதுகள் சமூக ஊடகங்களில் பரவலானதைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

பயனீட்டாளர்கள் அவர்கள் வாங்கும் பொருள்களுக்கு சரியான கணக்கீடு செய்யபட்டதை விற்பனையாளர்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கத்தின் மூத்த சமூகவாதி டத்தோ நட்ஷிம் ஜொகான் கேட்டுக் கொண்டார்.

பயனீட்டாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால் அவர்கள் உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் மற்றும் கூட்டுறவு அமைச்சிடம் புகார் செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker