Latestமலேசியா

மாட் சாபுக்கென சமூக ஊடகங்களில் ஒரு ‘ரசிகர் மன்றம்!’

கோலாலம்பூர், ஜூன். 3- பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் மிகச் சமான்ய மக்களில் ஒருவராக, எளிமையான மனிதராகத் திகழ்ந்து வந்த புதிய தற்காப்பு அமைச்சரான மாட் சாபு என்கிற முகம்மட் சாபு, சிங்கப்பூரில் நடக்கும் அனைத்துலக மாநாட்டிற்கு வந்திருந்த போது அவருக்கு மக்களும் சக தலைவர்களும் அளித்த வரவேற்பில் திக்குமுக்காடிப் போனார்.

வெள்ளிக்கிழமை சிங்கையிலுள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்குச் சென்றிருந்த போது அங்கு உள்நாட்டுக்காரர்களும் வெளிநாட்டுக்காரர்களும் சூழ்ந்து அவரிடம் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு பலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டதில் அவர் திகைப்புடன் காணப்பட்டார்.

மேலும், மலேசியாவில் அரசியல் உள்பட என்ன நடக்கிறது என்பதை இவ்வளவு மக்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்களா? என்று அவர் ஆச்சர்யம் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் கடந்த வெள்ளியன்று தொடங்கிய 17ஆவது ஆசிய தற்காப்பு அமைச்சர்கள் மாநாடு மற்றும் அனைத்துலக ஷங்கரிலா கலந்துரையாடல் ஆகியவற்றில் கலந்து கொள்ள மாட் சாபு இங்கு வந்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அமானா நெகாரா கட்சியின் தலைவரான மாட் சாபு தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்த மாநாட்டின் பேராளர்கள் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தங்கும் விடுதி ஊழியர்கள் உள்பட அனைவரும் மாட் சாபுவுடன் செல்பி எடுத்துக் கொள்வதும் கைகுலுக்கி மகிழ்வதும் அவருக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாத்திஸூடனான சந்திப்பின் போது மாட் சாபுவை அவர் மிக உற்சாகத்துடன் வரவேற்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இந்நிந்லையில் மாட் சாபுவின் சிங்கப்பூர் வருகையின் போது அவருடன் பலரும் கைகுலுக்குவதையும், தலைவர்களுடன் அவர் உரையாடும் காட்சிகளையும் தங்களின் சமூக ஊடகங்களில் மலேசியர்கள் பலரும் பகிர்ந்து தங்களது கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர்.

பணிவான- எளிமையான மனிதருக்கு எங்கு சென்றாலும் சிறப்பு என்று சிலர் கருத்துக் கூறியுள்ளனர். மாட் சாபு தற்காப்பு அமைச்சராக பதவியேற்ற முதல் மலேசியாவில், சமூக ஊடகங்களில் அவருக்கென்று ஒரு ரசிகர் மன்றமே உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker