Latestமலேசியா

மாணவர்களின் புத்தகப் பை சுமை! -ஆராயப்படும்!

சிம்பாங் ரெங்காம்,ஜுன்.3 – மாணவர்கள் பள்ளிக்குச் சுமந்து செல்லும் புத்தகப்பை சுமையைப் பற்றிய புகார்கள் அதிகம் வருவதாக கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் கூறினார். மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைப்பதற்கான வழிமுறைகள் ஆராய்ந்து வரப்படுவதாகவும் அவர் சொன்னார்.

“சில வளர்ச்சியடைந்த நாடுகளில் பாட புத்தகங்களை சார்ந்திராமல், மாணவர்கள் தங்கள் சொந்த யோசனைகளைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள ஆசிரியர்கள் ஊக்குவிப்பு வழங்குகின்றனர். எந்தவித கூடுதல் செலவில்லாமல் நாமும் இதேபோன்ற அணுகுமுறையை கல்வி முறையில் கடைபிடிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நேற்று ஜொகூரில் உள்ள சிம்பாங் ரெங்காமில் எஸ்.டபிள்யூ .கார்ப்பரேஷன் கழிவு நீர் திட்டத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் மஸ்லீ மாலிக் அவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள், பட்டதாரிகள் ஆகியோர் தமது கைத்தொலைப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்புவது உள்பட மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் மூலமாக பல்வேறு பரிந்துரைகளை அனுப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker