Latestமலேசியா

‘ஹாக்கி’ ராஜேந்திரனின் மருத்துவ நிதி: முன்னாள் வீரர்கள் ஒன்று திரண்டனர்!

ஜோர்ஜ் டவுன்,ஜுன்.3- கடந்த 40 ஆண்டுகளாக ஹாக்கிப் பயிற்சியாளரான ராஜேந்திரன் பாலகுருசாமி பினாங்கில் நூற்றுக்கணக்கான இளம் ஹாக்கி வீரர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். 67 வயதான அவருக்கு புற்றுநோய் இருப்பது ஓர் ஆண்டுக்கு முன்பு கண்டறியப்பட்டது.

அவரின் சிகிச்சைக்காக தேசிய விளையாட்டு வீரர்கள் அறக்கட்டளை 20,000 ரிங்கிட் வழங்க ஒப்புக்கொண்டது. அதே வேளையில், ‘அங்கிள் போப்’ என பலரால் அன்பாக அழைக்கப்படும் ராஜேந்திரனின் பயிற்சியில் வளர்ந்த முன்னாள் வீரர்களும் நன்கொடையை திரட்ட முயற்சி செய்து வருகின்றனர்.

“அவரின் நிலைமையைக் கண்டு பல வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,” என நேற்று ராஜேந்திரனை, அவரது இல்லத்தில் சந்தித்த முன்னாள் அனைத்துலக மற்றும் நடப்பு பினாங்கு பயிற்சியாளர் எம். ஜீவா மோகன் தெரிவித்தார்.

மேலும், ராஜேந்திரனின் சிகிச்சைக்காக மலேசிய அறிவியல் பல்கலைக்கழக ஹாக்கி அரங்கத்தில் ஒரு சிறப்பு ஹாக்கிப் போட்டியையும் பின்னர் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியும் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஜூலை 14ஆம் தேதி நடைபெற இருக்கும் சிறப்பு போட்டியிலும் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியிலும் கீவன் ராஜ், லோகன் ராஜ், ரோட்ஹனிசாம் மாட் ராட்ஸி, முகமட் தானீர் ஹருண், ஜீவன் மோகன், ரசாக் சைடின், மற்றும் முகமட் நிஸாம் நோர்டின் ஆகிய முன்னாள் அனைத்துலக வீரர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.

பினாங்கைச் சேர்ந்த ராஜேந்திரன் 1971 மற்றும் 1973 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் மலேசியக் குழு தங்கம் வென்றதற்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker