Latestமலேசியா

அட்டர்னி நியமனம்: ஆட்சியாளர்கள் கூடுகின்றனர்

கோலாலம்பூர், ஜுன். 4- புதிய அட்டர்னி ஜெனரல் நியமனம் குறித்து விவாதிக்க ஆட்சியாளர்களின் மன்றம் நாளை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு அட்டர்னி ஜெனரலான டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலியின் பதவியிலிருந்து நீக்கி விட்டு, புதியவரை நியமிப்பது குறித்து ஆட்சியாளர்கள் மன்றம் நாளை விவாதிக்கும் என்று அரச முத்திரைக் காப்பாளர் சையட் டானியல் சையட் அகமட் தெரிவித்தார்.

புதிய அட்டர்னியை நியமிப்பதில் பக்காத்தான் அரசாங்கத்திற்கும் மாமன்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தெரியவந்துள்ளது.
பிரதமர் துன் மகாதீர், அட்டர்னி ஜெனரல் பதவிக்கு பிரபல அரசியல் சட்ட நிபுணரான வழக்கறிஞர் டோம்மி தோமசை நியமித்துள்ளார்.

எனினும், முஸ்லிம் அல்லாதவர் ஒருவரை அப்பதவிக்கு நியமனம் செய்வதில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து, நாளை ஆட்சியாளர்களின் மன்றம் கூடி விவாதிக்க இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker