Latestமலேசியா

அமைச்சர் சுஷ்மாவின் விமானம் 14 நிமிடம் மாயம்! உச்சக்கட்ட பதற்றம்!

புதுடில்லி, ஜூன். 4- மொரீசியஸ் சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விமானம் 14 நிமிடம் மாயமானதால் பெரும் பதற்றநிலை உருவானது.

‘பிரிக்ஸ்’ மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க சுஷ்மா ஸ்வராஜ் 5 நாட்கள் பயணமாக சனிக்கிழமை தென்னாப்பிரிக்கா சென்றார். ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் மற்றும் மொரிசீயஸில் இறங்கி எரிபொருள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சுஷ்மா ஸ்வராஜ் புறப்பட்டு சென்றார் இந்திய எல்லையை கடந்த பின் மாலி கட்டுபாட்டு அறையுடன் மாலை 4.44 மணி வரை தொடர்பில் இருந்தது.

ஆனால், மொரீசியஸ் எல்லைக்குள் சென்ற போது கட்டுபாட்டு அறையுடன் திடீரென 14 நிமிடங்கள் விமானம் தனது தொடர்பை இழந்தது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

மொரீசியஸ் விமான கட்டுபாட்டு அறையும் அவசர நிலையை அறிவித்தது. 14 நிமிடங்களுக்குப் பின் மாலை 4.58 மணிக்கு சுஷ்மா ஸ்வராஜின் விமானத்துடன் மீண்டும் தகவல் தொடர்பு கிடைத்தது. இதையடுத்து மொரீசியஸில் பாதுகாப்பாக சுஷ்மா ஸ்வராஜ் விமானம் தரை இறங்கியது. இதனால் பதற்றம் தணிந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker