Latestமலேசியா

ஆசிரியர் இடமாற்றம்; லஞ்சமா? கல்வி அமைச்சு போலீசில் புகார்!

கோலாலம்பூர், ஜூன். 4- தனது வேலை இடமாற்றம் குறித்து அதிருப்தி அடைந்த ஆசிரியர் ஒருவர், மூன்றாவது தரப்பினர் ஒருவருக்கு லஞ்சம் கொடுத்ததன் வாயிலாக தான் விரும்பும் பள்ளிக்கு ஆசிரியராக செல்லவிருக்கிறார் என்ற செய்தி சமூக வலைத் தளங்களில் பரவலாகி வருகிறது. இதன் தொடர்பில், கல்வி அமைச்சு போலீசில் புகார் செய்தது.

தனது அமைச்சின் அதிகாரிகளின் நேர்மையை களங்கப் படுத்தும் வகையில் அந்த முகநூல் செய்தி அமைந்துள்ளதால், அது குறித்து அவ்வமைச்சு புகார் செய்துள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டது.

அந்தச் செய்தியை சமூக வலைத் தளங்களில் பரப்பிய அந்த முகநூல் பக்க உரிமையாளரிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய வேளையில், அவ்விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு தனது அதிகாரிகளிடத்திலும் விசாரணை மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேலை இடமாற்றம் குறித்து ஆசிரியர்கள் கல்வி அமைச்சுடன் மட்டும்தான் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மூன்றாம் தரப்பினருடன் இதன் தொடர்பில் எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தப் படக் கூடாது என்று கல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தங்களுக்கு கொடுக்கப் பட்ட அதிகாரத்தை தவறான வகையில் யாரேனும் உபயோகித்திருக்கும் பட்சத்தில், சம்பந்தப் பட்டவர்கள் மீது கல்வி அமைச்சு கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் வேலை இடமாற்றத்திற்கு கல்வி அமைச்சில் லஞ்சம் பெறப் படுவதாகவும், லஞ்சம் கொடுக்கப் பட்டால், ஆசிரியர்கள் விரும்பும் பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற்றுக் கொள்ளலாம் என்று ‘நூர் அமீரா’ என்ற பெண் தனது முகநூல் பக்கத்தில் குற்றஞ்சாட்டி இருந்தார்.

ஒரு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பட்சத்தில், அப்பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப் படுகின்றனர். ஆசிரியர்கள் நினைக்கும் தறுவாயில் எல்லாம் இடமாற்றம் பெற முடியாது என்று கல்வி அமைச்சு தெளிவுப் படுத்தியுள்ளது. 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker