Latestமலேசியா

2 போலீஸ் அதிகாரிகளின் 5 சொகுசுக் கார்கள் பறிமுதல்!

கோலாலம்பூர், ஜுன்.4- கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு தலைமை போலீஸ் அதிகாரிகளில் ஒருவருக்குச் சொந்தமான 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புமிக்க ஐந்து சொகுசுக் கார்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பறிமுதல் செய்தது.

‘பெரார்ரி’, ‘பி.எம்.டபிள்யூ’, ‘மினி கூப்பர்’, மற்றும் ‘மெர்சடிஸ் பென்ஸ்’ ரகத்தைச் சேர்ந்த நான்கு கார்கள் விசாரணை செய்யப்பட்ட வெவ்வேறு இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

அதோடு, அவற்றோடு கைப்பற்றப்பட்ட ஓரு ‘பி.எம்.டபிள்யூ ஜி.எஸ்’ ரக உயர் தர மோட்டார் சைக்கிள், கைது செய்யப்பட்ட உதவி ஆணையாளருக்குச் சொந்தமானது என நம்பப்படுகிறது என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பணம் பெறப்பட்ட வழியைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கடந்த வெள்ளி முதல் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று

சுமார் 1 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தை வைத்திருந்த இரண்டு தலைமை போலீஸ் அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த வாரம் வியாழக்கிழமை கைது செய்தது.

அவர்கள் இருவரும் புக்கிட் அமானில் ஊழல், சூதாட்டம் மற்றும் குண்டர் கும்பல் எதிர்ப்பு சிறப்பு அதிரடிப் படையில் உதவி ஆணையாளர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பதவியை வகிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker