Latestமலேசியா

அம்னோ தலைவர்: கைரிக்கு மகாதீர் ஆதரவு!

அலோர் ஸ்டார், ஜூன்.4 – அம்னோவை சிறப்பாக வழிநடத்த அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடினுக்கு எல்லாத் தகுதிகளும் இருப்பதாக

பிரதமர் துன் மகாதீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

திசைமாறித் தடுமாறும்  அம்னோவுக்கு புத்துயிரை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கைரியின் தென்படுகிறது.  அதனால், அம்னோ தலைவர் பதவிக்கு கைரி தாராள மாக போட்டியிடலாம் என துன் மகாதீர் கருத்துரைத்துள்ளார்.

கடந்த மே 22-ஆம் தேதி, அம்னோவின் இடைக்காலத் தலைவர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி  இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள கட்சித் தேர்தலில், தலைவர், துணைத் தலைவர், உதவித் தலைவர்கள் என  அனைத்துப் பதவிகளுக்கும் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்  என்று அறிவித்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை ஆண்டுவந்த தே.மு. கடந்த பொதுத் தேர்தலில் கண்ட மிக மோசமான தோல்வியை அடுத்து அம்னோவின் ஆணிவேரும் ஆட்டம் கண்டது. இதனை சரி செய்ய சிறந்த தலைமைத்துவம் அவசியமாகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker