Latestமலேசியா

1எம்டிபி விசாரணை: ஊழல் ஒழிப்பு குழுவுக்கு முழு அதிகாரம் – மொகிடின்

கோலாலம்பூர், ஜூன்.4- 1எம்டிபி ஊழல் விவகாரம் மீதான விசாரணை நடவடிக்கைகளை வழிநடத்தும் அதிகாரத்தை அதற்காகவே அமைக்கப்பட்ட சிறப்பு செயற்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் நஜிப்பை எப்போது கைது செய்வது, எப்போது அவர் மீது குற்றம் சாட்டுவது என அனைத்து நடவடிக்கைகளையும் முடிவு செய்யும் அதிகாரமும் அவற்றுள் அடங்கும்.

கடந்த மே 17-ஆம் தேதி, 1எம்டிபி விவகாரம் தொடர்பில், அரசாங்க ஆலோசக மன்றம் ஒரு சிறப்பு செயற்குழுவை அமைத்தது. ஐவர் அடங்கிய அக்குழுவில் முன்னாள் சட்டத் துறைத் தலைவர் டான்ஶ்ரீ அபு தயீப்பும் அடங்குவார். அதையடுத்து, கடந்த மே 21-ஆம் தேதி இந்த ஊழல் விவகாரத்தை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.

முன்னாள் சட்டத் தறைத் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் கனி பத்தாய்ல், மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் முன்னாள் உயர் ஆணையர் டான்ஶ்ரீ அபு காசிம் முகமட், தற்போதைய லஞ்ச ஒழிப்பு ஆணையத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் சுக்ரீ அப்துல், புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் முன்னாள் உயர் அதிகாரி டத்தோ அப்துல் ஹமிட் பாடோர் ஆகியோர் இக்குழுவிற்கு தலைமை ஏற்றுள்ளனர்.

1எம்டிபி நிதி முறைகேட்டில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றம் சாட்டுதல், ஊழல் மூலம் பதுக்கி வைத்திருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்தல், விசாரணை மேற்கொள்ளுதல் ஆகியவை அவர்களின் பொறுப்புகளில் இடம்பெற்றுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker