Latestஉலகம்

5 நாள் போராட்டம்: ஒரு திமிங்கலத்தின் சோக முடிவு!

பேங்காக், ஜூன். 4- உடல் நலம் குன்றி கரையில் ஒதுங்கிய திமிலங்கத்தைக் காப்பாற்ற மருத்துவர்களும் தொண்டூழியர்களும் நடத்திய போராட்டம் சோகத்தில் முடிந்தது.  சுமார் 80-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளை விழுங்கி இருந்ததால் அந்தத் திமிங்கலம் முடிவில் மரணத்தைத் தழுவியது.

தாய்லாந்து தென் சோங்லாவில் உள்ள கடற்கரை  பகுதியில் திமிங்கலம் ஒன்று உடல்நலக் குறைவினால் கரை ஒதுங்கியது. அதனைக்  கண்ட மக்கள் இது குறித்து மருத்துவக் குழுவுக்கு தகவல் தெரிவித்தன.

அப்பகுதிக்கு வந்த மருத்துவக் குழுவினர் திமிங்கலத்தை மீட்டெடுத்து, சிகிச்சை அளிக்க முற்பட்டனர். தொடர்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த  நிலையில் 5 நாட்கள் திமிங்கலத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையின் போது திமிங்கலம் பிளாஸ்டிக் பைகளை கக்கியது. பின்னர் உயிரிழந்துள்ளது. இதனால் மருத்துவ  குழுக்கள் 5 நாள்கள் போராடியது வீண் போய்விட்டதே என மனவருத்தம் கொண்டனர். அதன் பின்னர் உடற்கூறு ஆய்வின் போது அதன் வயிற்றுக்குள் 80 பிளாஸ்டிக் பைகள் இருப்பதைக் கொண்டு மருத்துவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker