Latestமலேசியா

ஏஜி பொறுப்பு கடினமானதே! – டோம்மி தோமஸ்

கோலாலம்பூர், ஜூன்.5- நாட்டின் சட்டத்துறை தலைவராக சட்ட நிபுணர் டோம்மி தோமஸை பிரதமர் துன் மகாதீர் நியமித்ததற்கு பேரரசர் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் தமது பொறுப்பு கடினமான ஒன்றே என டோம்மி தோமஸ் குறிப்பிட்டார்.

டான்ஶ்ரீ முகமட் அபெண்டி அலிக்கு பதிலாக 66 வயதான டோம்மி தோமஸ் சட்டத்துறை தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.

நாளை புத்ராஜெயாவில் தனது பதவியை அவர் ஏற்பாரா? என்ற கேள்விக்கு, தாம் தற்போது விடுப்பில் இருப்பதாகவும், முறையாக நியமனத்தை பெற்ற பின்னரே, தாம் பதவி ஏற்றுக் கொள்ளவிருப்பதாக தோமஸ் தெரிவித்தார்.

இன்று தாம் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை நேரில் சந்தித்ததாகவும், நாளையும் தாம் மகாதீரை சந்திக்கவிருப்பதாகவும் தோமஸ் கூறினார்.

சட்டத்துறை தலைவராக நியமிக்கப் படுவது தொடர்பில் தாம் மகிழ்ச்சி கொள்வதாக அவர் சொன்னார். இதனிடையில், அவரின் நியமனத்திற்கு முன்னாள் சட்டத்துறை தலைவர் அபெண்டி அலி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று செய்தியாளர்கள் தோமஸிடம் தெரிவித்தனர். “அவரின் வாழ்த்துகளுக்கு நன்றி” என்று தோமஸ் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker