Latestஉலகம்

ஜெர்மனி -ரஷ்ய உறவுகளில் சிக்கல் முற்றுகிறது!

பெர்லின், ஜூன்.5- ஜெர்மனியின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் அண்மைய காலமாக ரஷ்யாவுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்துக்களைப் பார்த்தால் இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த சுமுகமான உறவுகள் முடிவுக்கு வரும் அபாயம் நிலவிவதாக கருதப்படுகிறது.

இரண்டாம் உலகப்போர் இரண்டு நாடுகளையும் பிரிப்பதற்கு பதிலாக அன்று நெருக்கமாக்கியதை நினைவு கூறுகிறார்கள் ஜெர்மானியர்கள் சிலர்.
கொப்பார்பசேவ் காலக்கட்டம் மற்றும் சோவியத் யூனியனின் முடிவு குறித்து அதிகம் உணர்ச்சி வசப்பட்டவர்கள் ஜெர்மனியர்கள் என்றே கூறலாம்.

இதனால் தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பிளவு ஒரு பிரிவினரை கவலையடைய செய்திருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே இருந்த நெருக்கத்தை உணர்ந்தவர்கள் இந்த பிரிவு குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதனால், புதிய வெளியுறவுத்துறை அமைச்சரான ஹெக்கோ மாஸின் அண்மைய கருத்துகளும் அவரது குரலின் தொனியும் ஜெர்மனி மக்களிடையே இரு வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளன.

அவரது கருத்துக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தினரும் அவரது பேச்சிலுள்ள தொனியைக்கூட எதிர்த்து ஒரு கூட்டத்தினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஷ்யாவின் மீது வெறுப்பு அதிகரித்து வருவதாக அண்மைய பேட்டி ஒன்றில், ஹெக்கோ மாஸ் தெரிவித்திருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker