Latestமலேசியா

பி.ஜே.யில் ராஜூ, ஶ்ரீபாண்டி உணவகங்களை மூட உத்தரவு!

கோலாலம்பூர்,ஜுன்.5 –  பெட்டாலிங் ஜெயா, செக்ஸன் 5-இல் உள்ள இரண்டு வாழை இலை உணவகங்களையும் ஒரு சீன உணவகத்தையும் மூட வேண்டும் என்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அவை ஜாலான் சன்தேக் 5/13இல் ஒரே வரிசையில் அமைந்திருக்கும் காசிங் உணவகம், ராஜு உணவகம் மற்றும் ஸ்ரீ பாண்டி உணவகம் ஆகியவை ஆகும்.

கடந்த வாரம் சாலையில் தேங்கியிருந்த தண்ணீரைக் கொண்டு தட்டுகளைக் கழுவிய ராஜ் வாழை இலை உணவக ஊழியர்களைப் பற்றிய காணொளி சமூக ஊடகங்களில் பரவலானதை அடுத்து அந்த உணவகம் கோலாலம்பூர் மாநகராட்சியால் (டிபிகேஎல்) மூடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று இந்த மூன்று உணவகங்களும் மூடப்பட்டன. இன்று காலை நடந்த அந்த திடீர் சோதனையின் போது சில உணவகத்தின் அலமாரிகளிலும், தரைகளிலும், குளிர்சாதனப் பெட்டி கதவிலும் கரப்பான் பூச்சிகளும் எலி கழிவுகளும் காணப்பட்டன.

“சம்பந்தப்பட்ட உணவகங்கள் தூய்மையாக இருப்பதாக பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி திருப்தி அடையும் வரை அந்த உணவகம் மூடப்படும்,” என சோதனையை தலைமைத் தாங்கிய பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி கவுன்சிலர் சீன் ஓன் கூறினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker