Latestமலேசியா

பேங்க் நெகாரா ஆளுனர் பதவி விலகலா?

கோலாலம்பூர், ஜூன்.5- பேங்க் நெகாரா ஆளுனர் பதவியில் இருந்து தான் விலகுவதாக டான்ஶ்ரீ முகமட் இப்ராஹிம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016-ஆம் ஆண்டு மே மாதம்,  16 ஆண்டுகளாக பேங்க் நெகாராவை திறம்பட வழிநடத்திய டான்ஸ்ரீ டாக்டர் சேத்தி அக்தார் அசிஸ் பணி ஓய்வு பெற்றதை அடுத்து, டான்ஶ்ரீ முகமட் இப்ராஹிம் அப்பதவியை ஏற்றார்.

டான்ஶ்ரீ முகமட் இப்ராஹிம்  தாமாகவே எடுத்ததாக கூறப்படும் இம்முடிவிற்கு அரசாங்கத்தின் கருத்தென்ன என்பது தெரியவில்லை. இது குறித்து அவரும் பேச மறுத்துவிட்ட வேளையில் உண்மை நிலவரம் இன்னும் சரியாகத் தெரியவில்லை.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker