Latestசினிமா

மருத்துவமனையில் நடிகை பிபாஷா

மும்பை, ஜூன்.5- நடிகை பிபாஷா பாசு கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழில் விஜய்யுடன் ‘சச்சின்’ படத்தில் நடித்தவர். பிபாஷா பாசு.
இந்தி திரையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான மூச்சுத்திணரல் காரணமாக அவதிப்பட்டு வந்த பிபாஷா பாசு, மும்பை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று இருதினங்களுக்கு முன் வீடு திரும்பினார்.

மறுபடியும் கடினமான மூச்சுத் திணறலுக்கு ஆளாகியப் பின் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வருகிறது.

தற்போது அவரின் உடல் நிலை தேறிவருவதாக மருத்துவர்கள் கூறினர். இவருக்கு இளம் வயதிலிருந்தே ஆஸ்த்துமா நோய் இருந்ததாக தெரிய வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker