Latestமலேசியா

அம்னோ இளைஞர் தலைவர் பதவிக்கு ஜமால் போட்டி!

கோலாலம்பூர், ஜூன். 6 – அம்னோவின் கட்சி தேர்தலில் சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யுனோஸ் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இதனை அவர் தலைவருக்கான வேட்புமனு பாரத்தை பூர்த்தி செய்து முகநூலில் பதிவேற்றி நேற்று உறுதிப்படுத்தினார். அதோடு, “வேட்புமனு பாரம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இன்றும் என்றும் அம்னோ மட்டுமே” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சுங்கை பெசார் அம்னோ பிரிவு பதவியை தக்கவைத்துக் கொள்ளப் போவதாகவும் அவர் உறுதிபடுத்தினார். முன்னதாக, கட்சி உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கைரி ஜமாலுடின் அறிவித்திருந்தார்.

கடந்த மே 25ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, போலீசாரின் கண்காணிப்பில் இருந்து தலைமறைவான ஜமாலை போலீஸ் இன்னமும் தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker