Latestமலேசியா

ஆடம்பர குடியிருப்பில் தென் கொரியர் சடலம்!

கோத்தா கினாபாலு, ஜூன். 6 – ஜாலான் துவாரான் அருகே அமைந்துள்ள ஆடம்பர குடியிருப்பில் தென் கொரியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் இறந்துக் கிடந்தார்.

“நேற்று காலை 9.44 மணி அளவில் போலீசார் அவசர அழைப்பு பெற்றனர். இறந்தவர் 46 வயதுடைய மூன் சோக் ஜின் என அடையாளம் காணப்பட்டார்,” என கோத்தா கினாபாலு போலீஸ் தலைமை உதவி ஆணையாளர் சந்திரா தெரிவித்தார்.

அதோடு, இறந்தவரின் உடல் படுக்கையறையில் இருந்த ஒரு அலமாரியின் அருகே அமர்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது என அவர் கூறினார்.

மேலும், லீகாஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் மூன் சோக் காலை மணி 10.06 அளவில் இறந்ததாக உறுதிப்படுத்தினர்.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குயின் எலிசபெத் மருத்துவனை 1க்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker