Latestமலேசியா

உயர் அரசு ஊழியர்களுக்கு ஆங்கில திறனாய்வு தேர்வு! -மகாதீர்

புத்ராஜெயா, ஜூன். 6– உயர் அரசாங்க ஊழியர்களுக்கு ஆங்கில திறனாய்வு தேர்வு நடத்தப்படும் என பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

“ஆங்கில மொழி மிகவும் முக்கியமானது. ஆகையால், உயர்மட்ட அரசாங்க ஊழியர்களால் இது நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்,” என இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

உயர்மட்ட அரசாங்க ஊழியர்கள் வெளிநாட்டில் அனைத்துலக தரப்பினருடன் சந்திப்பு மேற்கொள்வர். ஆகையால், அவர்கள் நல்ல ஆங்கில மொழி திறனைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம் என மகாதீர் வலியுறுத்தினார்.

மேலும், பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை உள்ள இணைப்பாட கல்வியை அரசு மறுபரிசீலனை செய்யும். அதோடு, உலக நாடுகளில் உள்ள கல்வி முறையை உள்நோக்கி, நம் நாட்டின் கல்வி முறையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை ஆராய அரசாங்க சார்பற்ற நிபுணர்களைக் கொண்ட செயற்குழு அமைக்கப்படும் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker