Latestமலேசியா

‘எனது மலாய்மொழி திறனை சரி செய்வேன்!’ -டோம்மி தோமஸ்

கோலாலம்பூர், ஜூன்.6- நாட்டின் சட்டத்துறை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சட்ட நிபுணரான தோம்மி தோமஸ், கடந்த 42 வருடங்களாக தாம் தனியார் துறையில் பணியாற்றி வந்த்தால், மலாய் மொழி பேசுவதில்லை என்றும், இனி மேற்கொண்டு அம்மொழியில் சரிவர பேச தாம் முயற்சிக்க விருப்பதாக தெரிவித்துள்ளார்.

“கடந்த 42 ஆண்டுகளாக, நான் எனது வணிக வாடிக்கையாளர்களிடம் ஆங்கில மொழியில் தான் பேசி வருகிறேன். வணிக பாரங்களிலும் ஆங்கில மொழியை தான் பயன்படுத்தி வந்தேன். அதனால், மலாய் மொழியை நான் அறவே பேசுவதில்லை. இப்போது அம்மொழியில் பேச எனக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார் அவர்.

மலாய் மொழித் திறனை மேம்படுத்த இனிமேற்கொண்டு முயற்சிக்க இருப்பதாக தோம்மி தோமஸ் செய்தியாளர்களிடம் கூறினார். சட்டத்துறை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டது தொடர்பிலான கேள்விக்கு, நாட்டிற்கு சேவை செய்ய தமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவே தாம் அப்பொறுப்பை கருதுவதாக அவர் தெரிவித்தார்.

“புதிய அரசாங்கத்தின் கொள்கையான மாற்றத்தை நான் ஏற்படுத்துவேன். 60 ஆண்டுகளாக ஒரே கட்சி ஆட்சி அமைத்து வந்தது. முதன் முறையாக நாட்டில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன் அடிப்படையில் நான் பொறுப்பாற்றுவேன்.
“வழக்கறிஞர் மன்றம், அரசாங்க சார்பற்ற அமைப்புகள் மற்றும் மக்களின் ஆதரவோடு சிறப்பாக சேவையாற்ற நாங்கள் அனைவரும் முயற்சிப்போம்” என்று அவர் உறுதியளித்தார்.

Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker