Latestமலேசியா

போலீசாரிடம் இருந்து தப்பிக்க மகனையே தூக்கி எறிந்த தகப்பன்!

கோலாலம்பூர், ஜூன் 6 – உலு கிள்ளானில் உள்ள கம்போங் பஜார் எனும் கிராமத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆடவன் ஒருவன், போலீசாரிடம் இருந்து தப்பிக்க தனது மகனையே தூக்கி எறிந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.15 அளவில் நடந்த அந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
“மகனைத் தூக்கி எறிந்து தப்பித்துச் செல்ல முயற்சித்த அந்த ஆடவனின் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததால் அவர் போலீசால் கைது செய்யப்பட்டார்,” என அம்பாங் ஜெயா மாவட்ட தலைவரான போலீஸ் துணை ஆணையாளர் ஹம்சா அலியாஸ் தெரிவித்தார்.

இருப்பினும், சந்தேக நபரின் மனைவியோடு அவரது மற்ற நண்பர்களும் தப்பித்து விட்டனர் என தாமான் மெலாவாத்தி போலீஸ் நிலையத்தில் அவர் கூறினார். அதோடு, தூக்கி எறியப்பட்டதால் சிராய்ப்பு காயங்களுக்கு உள்ளான சந்தேக நபரின் மகன் சிகிச்சைக்காக அம்பாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மேலும், சந்தேக நபர் திருட்டு மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்திய தாகவும் போதைப்பொருள் உபயோகித்ததாகவும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக ஹம்சா சொன்னார். கைது செய்யப்பட்ட ஆடவனின் மனைவி மேல் விசாரணைக்காக தேடப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker