Latestமலேசியா

மலேசிய பெண்ணுடன் கள்ளக் காதலா? தமிழகத்தில் இளைஞர் படுகொலை!

சென்னை, ஜூன்.6- இங்குள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை சுரங்கப்பாதையில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வெட்டப்பட்ட நிலையில் விஜயராகவன் என்பவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மலேசியாவில் ஏற்பட்ட கள்ளக்காதல் தொடர்பாக இவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

விஜயராகவன் 4 ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் வேலை பார்த்துள்ளார். மலேசியாவில் திருமணமான ஒரு பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் கணவருக்கு தெரிந்ததும் பிரச்சினை ஆரம்பமானது. இதனால் விஜயராகவன் தமிழகம் திருப்பி விட்டார். எனினும் அந்த பெண் அடிக்கடி தமிழகம் வந்து விஜயராகவனுடன் சேர்ந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

கடைசியாக அந்தப் பெண் ஏப்ரல் 13ஆம் தேதி தமிழகம் வந்துள்ளார். அவருடன் சேர்ந்து விஜயராகவன் பல்வேறு இடங்களுக்கு சுற்றியதாக தெரிகிறது.

இந்தக் கள்ளத் தொடர்பு நீடிப்பது பற்றி அறிந்த அந்தப் பெண்ணைச் சார்ந்தவர்கள், கூலிப்படையை ஏவி இருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தொடர்புடைய மலேசிய பெண்ணிடம் விசாரணை நடத்தினால் தான் முழு விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker