Latestமலேசியா

அதிகாரங்கள் பிரிக்கப்படும்! -டோம்மி தோமஸ்

புத்ராஜெயா, ஜூன்.7- இதுவரை நாட்டின் சட்டத்துறை தலைவரே, பொது (அரசு) வழக்கறிஞர் அலுவலகத்தின் தலைவராகவும் பொறுப்பேற்று வந்தார். அவ்விரு அதிகாரங்களும் ஒருவருக்கே வழங்கப் பட்டதால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, அந்த அதிகாரங்கள் இம்முறை பிரிக்கப் படும் என்று சட்ட்த்துறை தலைவர் டோம்மி தோமஸ் கூறினார்.

அவ்விரு அலுவலகங்களுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப் படுவதை தாம் ஆதரித்ததில்லை என்றும், இரு வேறு தலைவர்கள் அந்த அலுவலகங்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் தாம் எப்போதும் கருதியதாக தோமஸ் சொன்னார்.

சட்டத்துறை தலைவர், பொது வழக்கறிஞர் மன்ற தலைவராக பொறுப்பேற்க கூடாது என்று வழக்கறிஞர் மன்றமும், இந்நாள் வரை வலியுறுத்தி வந்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.

“இப்போது நான் சட்டத்துறை தலைவராக நியமிக்கப் பட்டதைத் தொடர்ந்து, பொது வழக்கறிஞர் அலுவலகத் தலைவராக வேறு ஒருவர் நியமிக்கப் பட வேண்டும் என்பதை முழுமையாக ஆதரிக்கின்றேன். இதன் வாயிலாக, இரு வேறு நபர்கள், நாட்டிற்கு சிறப்பான சேவையை வழங்க முடியும் என்று நான் கருதுகிறேன்” என்று தோமஸ் கூறினார்.

பொது வழக்கறிஞர் அலுவலகத்திற்கு சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க சில கால அவகாசம் தேவைப் படுகிறது என்று சட்டத்துறை அலுவலகம் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதனிடையில், தோமஸ் சட்டத்துறை தலைவராக தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்று சிலர் விமர்சித்தது தொடர்பில் கேட்கப் பட்ட கேள்விக்கு, “தங்களின் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக கூறும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு” என்று தோமஸ் பதிலளித்தார். பாராட்டுகளை விட விமர்சனங்களை கேட்கவே தமக்கு விருப்பம் அதிகம் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker