Latestமலேசியா

RON-95-விலை மாறாது: RON-97 வில மாறும்!

கோலாலம்பூர், ஜூன் 7 – இப்போதைக்கு RON-95, மற்றும் டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றும் RON-97இன் விலை வாராந்திர அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்தது.

RON-95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.20 ரிங்கிட்டும் டீசல் விலை லிட்டருக்கு 2.18 ரிங்கிட்டும் விற்கப்படும் என அரசாங்கம் தீர்மானித்ததாக நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

அதோடு, RON-97இன் விலை இன்று முதல் ஜூன் 13 வரை 2.66 ரிங்கிட்டுக்கு விற்கப்படும் என அவர் குறிப்பிட்டார். மத்திய அரசாங்கம் RON-95 மற்றும் டீசல் அனைத்து சில்லறைக் கொள்முதலுக்கும் லிட்டர் ஒன்றுக்கு 33 சென் உதவித் தோகை வழங்கும்.

உதவித்  தொகை இல்லாமல் RON-95 இன் விலை லிட்டருக்கு 2.53 ரிங்கிட்டுக்கும் டீசல் விலை லிட்டருக்கு 2.51 ரிங்கிட்டுக்கும் உயரும் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker