Latestமலேசியா

கல்வாத்; 2 மாணவர்களை நிர்வாணம் ஆக்குவதா?

கோத்தாபாரு, ஜூன் 8 – கல்வாத்திற்கு எதிரான சமய இலாகாவின் சோதனை நடவடிக்கையின் போது இரண்டு மாணவர்களை நிர்வாணப்படுத்தி, படம் பிடித்ததோடு, வீடியோவிலும் பதிவு செய்ததாக கூறப்படுவதை கிளந்தான் சமயத்துறை (ஜாஹிய்க்) மறுத்துள்ளது.

மாணவர்களை நிர்வாணப்படுத்திய படம் எடுத்ததாக கூறப்படும் சம்பவம், தொடர்பிலான எந்தவொரு சோதனை நடவடிக்கையும் தங்களுடைய பதிவில் இல்லை. அவ்வாறு செய்து எங்களது பணி நடைமுறை விதிகளுக்கு எதிரானது என்று சமய இலாகாவின் தலைவர் டத்தோ முகம்மட் ரஹிம் ஜூஸோ கூறினார்.

அப்படிப்பட்ட படங்களோ, வீடியோக்களோ சம்பந்தப்பட்டவர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிடும் வழக்கம் எதுவும் இல்லை என்றார் அவர்.

சில படங்கள் மற்றும் வீடியோக்கள் இத்தகைய நடவடிக்கையின் போது எடுக்கப்படுமானால், அது நீதிமன்ற விசாரணைக்கான ஆவணத்திற்காக மட்டும்தான் என்று அவர் சொன்னார். விதிமுறைகளை அதிகாரிகள் மீறுவார்களேயானால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னர்.

கல்வாத் சோதனை நடவடிக்கையின் போது ஒரு மாணவன் மற்றும் மாணவியை கட்டாயமாக நிர்வாணப்படுத்தி அதிகாரிகள் வீடியோ எடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாணவி தன்னுடைய அந்தரங்கங்களை மறைக்க முயற்சித்த போதும் அதற்கு அனுமதிக்காமல் இவர்கள் தடுந்துள்ளனர். இந்த வீடியோ பின்னர் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker