Latestஉலகம்

‘கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன்!’- டிரம்ப்

வாஷிங்டன், ஜூன். 8- அடுத்து வாரம் சிங்கப்பூரில், வடகொடரிய அதிபர் கிம் ஜோங் யுன் உடனான பேச்சுவார்த்தை சமூகமாக நடந்தால் அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிராம்ப் தெரிவித்தார்.

வடகொரியா அதிபர் கிம் ஜோங் யுன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசவுள்ளனர்.

இவ்விரு தலைவர்களும் சிங்கப்பூர் செந்தோஷா தீவில் கேபெல்லா ஹோட்டலில் காலை 9.00 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்ட்ர்ஸ் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு குறித்து ஆலோசனை நடத்துவற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அமெரிக்காவுக்கு சென்று டிரம்ப்பை சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வடகொரிய அதிபர் கிம்முடன் சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பு வடகொரியாவுக்கு ஒரு புதிய எதிர்காலத்தின் தொடக்கத்தை பிரதிபலிக்கும் என்றார்.

உண்மையைச் சொல்லப் போனால், உலகிற்கு ஒரு பிரகாசமான புதிய விடியல் இது. இந்த சந்திப்பு, சுமூகமாக முடிந்தால் அடுத்து 5 நாட்களுக்குள் கிம் ஜோங் யுன்னை அமெரிக்காவுக்கு வருமாறு அழைக்க முடிவெடுத்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker